விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தார்.நடிகர் விஜய், விஷச்சாராயம் குடித்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் வயிற்று வலி, கண் வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் கள்ளத்தனமாக பெற்ற நபரிடம் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து உள்ளார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று வாந்தி கண்ணெரிச்சல் தலைச்சுற்றல் ஒலித்தவை ஏற்பட்டதால் அவர்களை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஆட்டோ மூலமாகவும் உறவினர்கள் அழைத்து வந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைக்கு சுமார் 35க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் 120க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்த நபர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விஷச்சாராயம் குடித்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையால் உள்ளனர். இந்த நிலையில் திரைப்பட நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வந்தார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார் அப்போது உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் விஜயின் காலில் விழ முற்பட்டபோது உடனடியாக அதை அவர் தடுத்தார் அத்துடன் அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
தமிழக அரசின் மேத்தா போக்குதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று ஏற்கனவே விஜய் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தார் அதன் பின்னர் ஒவ்வொருவராக சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், கள்ளக்குறிச்சி தனது கட்சியின் மாவட்ட செயலாளரை அழைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அறிவுறுத்தினார். விஜய் வந்து சென்றது தற்போதைய சூழலில் அரசியலில் பேசுபொருளாக மாறிப் போய் உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கட்சிக்காரர்கள் செயல்பட வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார். விஜய் வந்து செல்கிற வரையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.