தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வளம் வரும் நடிகர் விஜய் , அரசியல் பொறுத்த வரை ரஜினிக்குக்கு எதிர்மறையாக நிற்பார் என்ற பேச்சு தற்போது நிஜமாகி உள்ளது .
கடந்த சில வருடங்களாக சினிமாவை தொடர்ந்து தான் அரசியலிலும் களம் காண போகிறேன் என்று கூறி வந்த நடிகர் விஜய் , ரஜினிகாந்த் போல் வெறும் வாய் வார்த்தையில் ஜாலம் காட்டாமல் , தனது ரசிகர்மன்ற பொறுப்பாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி , சென்றாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரோடு அவருக்கான கட்சியை தொடங்கினர் .
‘ஆழம் அறியாமல் காலை விடாதே’ என்ற பழமொழிக்கு ஏற்ப , கட்சி தொடங்கியதும் தடால் புடால் என்று செயல்படாமல் சற்று நிதானமாகவே அனைத்து முடிவுகளும் எடுத்து வந்தார் .
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் , நாம் தமிழர் கட்சி சீமான் முதல் , பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வரை , விஜய் எங்கள் சொத்து என்று சொந்தம் கொண்டாடினார் .
எனினும் எந்த புகழ்ச்சிக்கும் மயங்காமல் தனது கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலை தான் நேரடியாக சந்திக்கும் என்றும் , இடையில் வந்த 2024 மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என எதிலும் தனது கட்சி போட்டியிடாது என்றும் மேற்கண்ட தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவுமில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து விஜயின் அடுத்த கட்ட நகர்வு குறித்து அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இன்று தனது த.வெ.க கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
த.வெ.க கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற்றுள்ளன இதனைத்தொடர்ந்து த.வெ.க பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது கட்சி அலுவலத்தில் கொடியை ஏற்றி வைத்த விஜய்.
பின்னர் தொண்டர்கள் மற்றும் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் விஜய். அப்போது பேசிய அவர், இன்று நம் எல்லோருக்குமே மிகவும் சந்தோஷமான நாள் என்னுடைய அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினேன் நீங்க எல்லாருமே எதிர்பார்த்து காத்திருந்த கொடியை இன்று நான் அறிமுகப்படுத்தியுள்ளேன் .

என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களான உங்கள் முன்பும் சரி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்பும் சரி நம் கட்சி அறிமுகப்படுத்துவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/from-tomorrow-our-flag-will-fly-all-over-the-country-tamil-nadu-will-prosper-t-v-kleader-vijay/
இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் நாம் எல்லோரும் உழைக்க வேண்டும. கட்சி ரீதியாக உழைக்க வேண்டும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.