ஆதாரம் இருக்கா.? ஆளுநர் RN ரவிக்கு திமுக எம்பி கனிமொழி கண்டணம்..!

2 Min Read
தூத்துக்குடி துப்பாக்கி சூடு கவர்னர் ரவி

அப்பாவி மக்களை போலீசார் சுட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது.ஆனால் போலீசார் தரப்போ போராட்டக்காரர்கள் கலவரம் செய்த காரணத்தால்தான் துப்பாக்கி சூடு

- Advertisement -
Ad imageAd image

2018ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.
இந்த சம்பவத்தில் 13 பேர் போலீஸாரால் பரிதாபமாக கொலை செய்யப்பட்டனர்.
போராட்டம் செய்து கொண்டு இருந்த மக்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதல் இது.அப்போதே சமூக வலைதளங்களில் இவை மக்களால் பார்க்கப்பட்டவை.

இந்த துப்பாக்கி சூடு உலக அளவில் கவனம் பெற்றது என்பது உலகறிந்த ஒன்று.
இந்த துப்பாக்கி சூடு சட்ட விரோதமாக நடைபெற்றதாக கடுமையாக புகார்கள் முன்வைக்கப்பட்டன.
அப்பாவி மக்களை போலீசார் சுட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது.
ஆனால் போலீசார் தரப்போ, போராட்டக்காரர்கள் கலவரம் செய்த காரணத்தால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு

அதோடு கலவரத்தில் சில விஷமிகள், சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றும் போலீசாரும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தனர்.அப்படியானால் நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை.விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணையம் கூட,
போராடிய மக்கள் மீது தவறில்லை. போலீசார் மீதுதான் தவறு என்று அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையினருக்கும் உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய கொடுமையான காயங்களோ அல்லது கொடுங்காயங்களோ ஏற்படவில்லை.

கனிமொழி

காட்டில் விலங்குகளை சுடுவது போல போலீசார் மக்கள் மீது கொடூரமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளார் என்று இந்த அறிக்கையில் கூட கூறப்பட்டது.
அப்போதே ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக, வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாக சிலர் கூறி இருந்தனர்.
ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் அவர்களால் வெளியிடப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.

”இப்படி நா கூசாமல் பொய் பேசும் ஆளுநர் ஆதாரம் வைத்திருகிறாரா? ஆதாரம் இருந்தால் அதை வெளியிடட்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தெரிவித்த ஆளுநர் ஆர். என் ரவி அவர்களே,
ஆதாரம் இல்லாமல் போகிற போக்கில் குறை சொல்லும் உங்களுக்கு என்னுடைய கண்டனங்கள்” என்று கூறியிருக்கிறார்.

திருமா எம்பி ரவிக்குமார்

விசிக எம்பி ரவிக்குமார் அவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிடுகையில்,
“வேதாந்தா நிறுவனத்தின் தூண்டுதலால் இதைப் பேசுகிறாரா ஆளுநர்?
அந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உயிர்த் தியாகத்தை கொச்சைப்படுத்தியதற்காக ஆளுநர் வருத்தம் தெரிவிக்கவேண்டும், ”
என்று குறிப்பிட்டு உள்ளார்

அதேபோல் விசிக தலைவர் எம்பி திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டனத்தில்,
”ஆளுநருக்கு இப்படி எல்லாம் பேச அதிகாரம் இல்லை.
ஆளுநர் ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார்.
ஒரு நிறுவனத்திற்காக அவர் பேசி வருகிறார்,”
என்று கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நீதிபதி தலைமையிலான ஆணையம் இப்படி அறிக்கை அளித்த பின்பும் ஆளுனர் ரவி இப்படி பேசுவது என்ன நாகரீகம் என்கிறார்கள் அரசியல் விமசகர்கள்.

Share This Article

Leave a Reply