துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி

1 Min Read
பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

சமீப காலமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் , இன்று கும்பகோணத்தில் புரட்சித்தலைவரின், புரட்சித்தலைவியின் உண்மை தொண்டர்களை அழிக்க நினைக்கும் துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு என அண்ணா திமுக சார்பில் கும்பகோணம் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது .
இதனால் கும்பகோணம் அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

- Advertisement -
Ad imageAd image

அ.தி.மு.க. கட்சியில் நடப்பது என்ன ?

பொதுச்செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை எதிர்த்தும், கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1.15 மணி வரையும், பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6.10 மணி வரையும் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார்.

மேலும் அவரது வாதத்தில் ‘ ஓ.பன்னீர்செல்வத்தை எந்த ஒரு காரணமும் இல்லாமல், விளக்கம் எதுவும் கேட்காமல், கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது. நியாயமற்றது.’ என்று நீதிபதி முன்பு தனது வாதத்தை எடுத்து வைத்தார் .

மேலும் அவரது வாதத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தலை நடத்துகின்றனர். ஒருவேளை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால், ஓ.பன்னீர்செல்வம் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருப்பார். அவர் போட்டியாக வரக்கூடாது என்பதால் திட்டமிட்டே, பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி, கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இப்போது அனுமதித்தாலும், ஓ.பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயாராக உள்ளார். யார் பொதுச்செயலாளார் என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். என்று தெரிவித்துள்ளார்

Share This Article
Leave a review