உண்மை பிம்பம் உடையும்-திருச்சி சூர்யா., என்னடா இது அண்ணாமலைக்கு வந்த சோதனை.!

0
71
அண்ணாமலை அமித் ஷா

சென்னை: கூடிய விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உண்மை பிம்பம் உடையும் என பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா தெரிவித்து உள்ளார்.

திமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் திமுகவையும், முதலமைச்சர் முக ஸ்டாலினை, தனது தந்தை திருச்சி சிவாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

பிரம்மாண்ட மாநாடு.. அதற்கு அடுத்து “துணை முதல்வர் உதயநிதி”.. ஸ்டாலினின் மாஸ்டர்பிளான்? அப்படியா? கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில், பாஜக மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஊடக விவாதங்கள், நேர்காணல்களில் தொடர்ந்து பேசி பேமஸான அவர், பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவருடன் பேசிய செல்போன் உரையாடல் அவரை உலகளவில் பேமஸாக்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் இடையேயான பரபரப்பு தொலைபேசி உரையாடல் வெளியாகி பாஜகவுக்கு உள்ளேயும் வெளியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
டெய்சியை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு திட்டிய திருச்சி சூர்யா, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோரது பெயர்களையும் அவர் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சூர்யா சிவாவை பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு
ஆணையிடுவதாகவும் தெரிவித்தார்.அதை தொடர்ந்து சூர்யா சிவாவும் டெய்சியும் சமாதானமாவதாக அறிவித்தனர். இந்த நிலையில் சூர்யா சிவாவை கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம்.

நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி. ” என்று தெரிவித்து இருந்தார். கட்சியில் இருந்து விலகினால் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக பேட்டியளித்து, ட்விட்டரில் பதிவிட்டும் வந்த திருச்சி சூர்யா, தற்போது அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், “கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன்.

வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும் நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்.” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கூட அண்ணாமலையை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருந்த திருச்சி சூர்யா சிவாவின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என பலர் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here