பெரியபாளையம் அக்கரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரியில் முன்விரோதம் காரணமாக ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் தப்பி ஓட்டம்.பெரியபாளையம் போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அக்கரம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரி இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் தனது லாரியில் சவுடு மண்ணை நிரப்பி கொண்டு குவாரியிலிருந்து வெளியே வரும்போது பர்மிட் பில் வாங்குவதற்காக கொட்டகை அமைக்கப்பட்டு பர்மிட் பில் வழங்கப்பட்ட இடத்திற்கு சென்று பில் வாங்கும்போது அங்கு சூர்யா என்பவரும் அவரது லாரிக்கு பர்மிட் பில் வாங்குவதற்காக நின்றிருந்துள்ளனர். அப்போது பிரகாஷை பார்த்து கோபமடைந்த சூர்யா தனது பணத்தை திரும்பு தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் சூர்யா தனது லாரியில் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு பிரகாசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்ற நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பிரகாஷ் உயிர் இழந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் பிரகாஷ் மற்றும் சூர்யாவும் நண்பர்கள் எனவும் சூர்யாவிடம் பிரகாஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக நகைகளை வாங்கி அடகு வைத்து திரும்பத் தராததால் இருவருக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்த உள்ளது.
இதன் காரணமாக இந்த கொலை சம்பவமானது அரங்கேறி உள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தப்பி ஓடிய சூர்யா மீது வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு சவுடு மண் குவாரியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.