தேன் எடுக்கச் சென்ற இடத்தில் புதையல்., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!

0
33
புதையல்

ஆந்திராவில் தேன் எடுக்க சென்ற இடத்தில் புதையலாக பித்தளை பானை நிரம்ப நிரம்ப கிடைத்த தங்க நாணயங்கள் கிடைத்தது. இதனை சென்னையில் விற்பனை செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைகையே அவர்களுக்கு ஆபத்தாக மாறிய நிலையில் 3 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். பூமியில் நிலத்தை தோண்டும்போது சில சமயங்கள் பானைகளில் தங்க நாணயங்கள் புதையலாக கிடைக்கும். இந்த புதையல்களை அரசிடம் தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால் சிலர் புதையல்களை அரசிடம் ஒப்படைக்காமல் பதுக்கி வைத்து விற்பனை செய்து விடுகின்றனர். மேலும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கையையும் வாழ தொடங்குகின்றனர்.

அந்த வகையில் ஆந்திராவில் தேன் எடுக்கப்போன இடத்தில் தங்க நாணயங்கள் புதையலாக கிடைத்துள்ளன. இதனை சென்னையில் விற்பனை செய்த 3 பேர் கும்பல் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு எப்படி புதையல் கிடைத்தது? போலீசில் எப்படி சிக்கினர்? என்பது பற்றிய விபரம் வருமாறு, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்த அஜித். இவர் தனது சகோதரர் உறவு முறையை சேர்ந்த அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோருடன் கடந்த மே 7ம் தேதி வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றனர். இதையடுத்து வருண், சுப்பிரமணியம் என்பவரும் தேன் எடுக்க வருவதாக கூறி அவர்களுடன் சென்றனர். வனப்பகுதியில் அவர்கள் தேன்கூட்டை தேடி அலைந்தனர்.

அப்போது அவர்களின் கண்களில் தேன்கூட்டுக்கு பதில் புதையல் தென்பட்டது. அதாவது பெரிய பாறைக்கு அடியில் பித்தளை பானை ஒன்று கிடப்பதை அவர்கள் பார்த்தனர். இதையடுத்து அந்த பானையை எடுத்து அவர்கள் உடைத்தனர். அதில் ஏராளமான தங்க நாணயங்கள் இருந்தன. மண் கலவையில் கலந்த நிலையில் தங்க நாணயங்கள் இருப்பதை பார்த்த அவர்கள் பூரித்துப்போயினர். இதையடுத்து புதையலை அரசிடம் ஒப்படைப்பதா? இல்லாவிட்டால் யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்வதா? என அவர்கள் திட்டம்போட்டனர். இந்த வேளையில் உறவு முறையில் சகோதரர்களான அஜித், அமரன், வெங்கடேஷ்வரன் ஆகியோர் வருண் மற்றும் சுப்பிரமணியத்தை ஏமாற்றியதோடு, தங்க நாணயங்களை எடுத்து கொண்டனர். இதையடுத்து 3 பேரும் சென்னை வந்து புதையல் மூலம் கிடைத்த தங்க நாணயத்தை விற்பனை செய்துள்ளனர்.

K(iiஇது l)o9தில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தங்க நாணயத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.4 லட்சத்தில் பழைய கார், ஆட்டோ வாங்கி உள்ளனர். மேலும் 770 கிராம் தங்க நாணயத்தை உருக்கி அவர்கள் நகைகள் செய்து அணிந்துள்னர். மேலும் அவர்களின் சகோதரி ஒருவர் வாங்கிய ரூ.1 லட்சம் கடனையும் அடைத்துள்ளனர். அதோடு அவர்களின் வாழ்க்கை முறையை மொத்தமாக மாற்றி உள்ளனர்.  ஆடம்பரமாக செலவழிக்க தொடங்கினர். இதனால் மற்றவர்களுக்கு திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. எப்படி இவர்களுக்கு நகை, கார், ஆட்டோ கிடைத்தன. அதோடு ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணம் எங்கிருந்து வந்தது? என குடும்பத்தினரும், அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் கேட்டனர். ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.

இதற்கிடையே தான் புதையலில் பங்கு கொடுக்காமல் கழற்றி விடப்பட்ட வருண் அவர்கள் மீது கோபமடைந்துள்ளார். அதோடு புதையல் கிடைத்தபோது அதனை அவர் தனது செல்போனில் போட்டோவாக எடுத்து வைத்திருந்தார். இதையடுத்து அந்த போட்டோவை அவர் தனது சகோதரியிடம் கூறியுள்ளார். இதனால் ஷாக்கான அவரது சகோதரி சம்பவம் குறித்து நெல்லூர் மாவட்ட எஸ்பியிடம் புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அஜித், அமரன், வெங்கடேஷ்வரனை கைது செய்தனர். மேலும் புதையலில் எவ்வளவு தங்க நாணயங்கள் இருந்தன. அந்த நாணயங்களை சென்னையில் எங்கு விற்பனை செய்யப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடத்தி புதையலை முழுமையாக பறிமுதல் செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து சென்னையில் விற்கப்பட்ட தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பணம், 21 சவரன் தங்கம், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 436 சிறிய தங்க நாணயங்கள், 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு சொகுசு கார், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here