கலைப் பொருட்கள் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக களிமண்ணால் செய்யும் கலைப் பொருட்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம். அப்படி கலைப்பொருட்களை செய்கின்றவர்கள் சொற்ப எண்ணிக்கையிலே இருந்து வருவது நாம் அறிந்தது. இந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள சாலை அகரம் கிராமத்தில் உள்ள ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து கலை பொருட்களை களிமண்ணால் செய்து விற்பனைக்கு வைத்திருப்பதை இந்த பகுதியைச் சேர்ந்த அனைவரும் அறிவார்கள். எல்லோராலும் கலைப் பொருட்களை செய்வது சுலபமானதல்ல. அதற்கான முதலீடு செய்வதும் கூட எல்லோராலும் இயலாத ஒன்று.
இது போன்ற கலைப் பொருட்கள் செய்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு வங்கிகள் மூலமாக கடன் வழங்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று அந்த மக்கள் எண்ணினார்கள். அந்த வகையில் விழுப்புரத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கல்விக்கு கேந்திரா நிறுவனம் மற்றும் நாபின்ஸ் வங்கியுடன் இணைந்து 30 நபர்களுக்கு 15 நாள் பயிற்சி வழங்கியது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அவர்கள் களிமண்ணால் கலைப் பொருட்களில் செய்வதில் ஆர்வம் காட்டி அவற்றை செய்து காட்சிப்படுத்தினர். அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு விதமான கலைப் பொருட்கள் அங்கு பயிற்சி பெற்றவர்களால் செய்யப்பட்டது.

அவற்றை விற்பனை செய்யும் பல்வேறு வழிகளையும் பயிற்சியில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 15 நாள் பயிற்சியில் தாங்கள் முழுமையாக கலைப் பொருட்களை செய்வதற்கு தயாராகி விட்டதாக பயிற்சி பெற்றவர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சியில் அறிய பல களிமண்ணால் ஆன கலைப்பொருட்களை செய்த பவானி கூருகையில்….

எனக்கு சொந்த ஊர் சாலை அகரம் தான் 3 பிள்ளைகள் கணவர் தற்போது தான் உயிர் இழந்தார், எனக்கு இந்த கலை மீது நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்து வந்தது, அந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக கல்வி கேந்திரா மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய பயிற்சி எனக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. தொடர்ந்து இங்கு நான் பயிற்சியில் கற்றுக்கொண்ட பல்வேறு முறைகளை பயன்படுத்தி இந்த குதிரை பொம்மையை தயார் செய்தேன். இது மிகுந்த வரவேற்பு பெற்றது. வழக்கமாக இது போன்ற கலைப் பொருட்கள் செய்பவர்கள் வீடுகளுக்கு வெளியே சூளை அமைத்து களிமண் பொம்மைகளை சுடுவது வழக்கம் ஆனால் சுற்றுப்புற சூழல் கருதி இப்போது அது போன்ற சூளைகளை அமைப்பதற்கு அரசு தடைவித்துள்ளது.
அதனால் மண் அடுப்பு அல்லது மின்சார அடுப்பு போன்ற அடுப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் சாதாரணமாக விறகடுப்பு பயன்படுத்துவதற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகலாம் அதே போன்று மண் சலிப்பது, அடுத்ததாக மண் பிசைவது, பொம்மைகள் செய்வதற்கு வசதியான சக்கரம் போன்றவைகள் செய்வதற்கு குறைந்தது 5 லட்சம் ஆவது முதலீடு செய்ய வேண்டும். ஆனால் எங்களை போன்றவர்களிடம் அவ்வளவு முதலீடு கிடையாது. இந்த பயிற்சியின் இறுதியில் எங்களுக்கு வங்கிகள் மூலமாக கடன் பெற்று தருவதற்கும் உறுதியளித்திருக்கிறார்கள். அதே போன்று தொடர்ந்து கல்வி கேந்திரா நிறுவனத்தின் மூலமாக நாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தருவதோடு எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது என்றார். தொடர்ந்து இந்த நிகழ்வின் இறுதி நாளில் இந்தியன் வங்கியை சேர்ந்த எல்டிஎம் ராஜேஸ்வரன் கல்வி கேந்திரா இயக்குனர்,எஸ். சின்னப்பன் கதர் கிராம கைதொழில் மாவட்ட உதவி இயக்குநர் அன்பழகன்,நாபின்ஸ் விழுப்புரம் பிராந்திய மேலாளர் சதீஷ் குமார் அருள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் முத்துக்ருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கு பெற்றது தொடர்பான விளக்க உரையினை க.விஜயராணி நிகழ்த்தினார்.