காதல் திருமணத்தால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்: நடந்தது என்ன?

1 Min Read

காதலித்து திருமணம் செய்த மனைவி சேர்ந்த வாழாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

- Advertisement -
Ad imageAd image

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் லெனின்-இந்திரா காந்தி என்ற தம்பதியருக்கு  அனுபல்லவி என்ற மகளும், பார்த்திபன் (வயது 26) என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் பார்த்திபன் நேற்று காலையில் வீட்டின் கூரையின் மீது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பார்த்திபனின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  பரிசோதனை முடிந்து அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார்,  புகாரின் பேரில் விசாரணை நடத்தினர்.

இறந்த பார்த்திபன், லாடபுரத்தை சேர்ந்த  ஞானவிழி இருவரும் காதலித்து வந்தனர். இருவரும்  கடந்த மாதம் 10-ந்தேதி பதிவு திருமணம்  செய்து கொண்டனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை விட்டு ஞானவிழி பிரிந்து சென்று விட்டார். ஞானவிழி  பெற்றோருடன் செல்வதாகவும், பார்த்திபனுடன் வாழ விரும்பவில்லை என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதனால் பார்த்திபன்  மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a review