- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக் கூண்டு அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஏராளமான ரசிகர்கள் குடும்பத்துடன் படத்தைக் காண வந்திருந்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே தியேட்டர் ஊழியர்களால் பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் டிக்கெட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/a-government-bus-collided-with-a-motorcycle-near-papanasam-a-teenager-died/
அப்போது அங்கு நின்ற ரசிகர்கள் கூறுகையில் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டால் அதை எங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஹவுஸ் ஃபுல் போர்டு போட வேண்டியதுதானே அதை விட்டுவிட்டு எங்களை நீண்ட நேரம் காக்க வைப்பது சரிதானா? எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தியேட்டர் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.