கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து லேசாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆவலம்குச்சிப்பாளையம் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் விவசாய நிலத்திலேயே அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்து கொள்வதாக வந்திருக்கிறார்.

விவசாயிகளும் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளனர். வியாபாரி தான் கொண்டு வந்த தராசு இயந்திரத்தைக் கொண்டு விவசாயிகளிடம் இருந்த நெல்லை எடை போட்டு வாங்கி உள்ளார். கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இந்த பகுதியில் சுமார் 1000 ஏக்கர் அறுவடை செய்யப்பட்ட நெல் பயிரை அந்த விவசாயி விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு அவருடைய தராசு கருவியின் மேலே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று விவசாயிகள் அந்த வியாபாரி எடை போட்ட நெல் மூட்டையை மீண்டும் தாங்கள் கொண்டு வந்த எடை இயந்திரம் மூலம் எடை போட்டுள்ளனர். இதில் வியாபாரிக்கும் விவசாயிக்கும் இடையே 10 கிலோ வித்தியாசம் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து வியாபாரியை கையும் களவுமாக பிடித்து தற்போது முற்றுகையிட்டு வருகின்றனர். சுமார் 100 டன்னுக்கு மேல் இதுவரை அந்த வியாபாரி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கேள்விக்குறியாகவும் விவசாயிகள் மத்தியில் இப்படி நூதன முறையில் ஏமாற்றும் வியாபாரிகள் இருப்பது விவசாயிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய பணத்தை வியாபாரியிடம் இருந்து பெற்று தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.