- தொடர் விடுமுறையையொட்டி தஞ்சையில் உலக பிரசித்தி பெற்ற “பெரிய கோவில்” , மற்றும் ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள். கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தினருடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் குழந்தைகள் குதூகலம்.
தீப ஒளி திருநாளை முன்னிட்டு தொடர்விடுமுறை கிடைக்கும் வகையில் வெள்ளிக்கிழமையான இன்றும் விடுமுறை அறிவித்த தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்த நிலையில் சுற்றுலா நகரமான தஞ்சையில் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று கண்டு ரசித்து வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்து வருகின்றனர் குறிப்பாக முதல் முறையாக பெரிய கோயிலுக்கு வருகை தரும் பயணிகள் மிகுந்த பரவசத்துடன் மாமன்னன் இராஜராஜ சோழனின் கலைத்திறமையை கண்டு வியந்தனர். ஆயிரம் ஆண்டுகளை கடந்த கம்பீரத்துடன் காட்சி தரும் பெரிய கோவிலை முதல் முறையாக பார்த்து பெருமகிழ்ச்சி அடைவதாகவும், தொடர் விடுமுறையை அரசு அறிவித்ததன் விளைவாகத்தான், இது போன்ற வாய்ப்பு கிடைத்ததாகவும் பல்வேறு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தீப ஒளி திருநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்றும் அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் தொடர்ந்து நான்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைத்த நிலையில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து பல்வேறு சுற்றுலா இடங்களையும் பார்வையிடுவதற்க்கு மிகுந்த வசதியாக இருந்ததாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதே போல் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜாளி பூங்கா பறவைகள் சரணாலயத்திற்கு குழந்தைகளுடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு கண்டு ரசித்தனர் ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா, தென் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பஞ்சவர்ணகிளி, ஆடம்பர புறாக்கள், பேன்சி கோழிகள், மிகப்பெரிய வெள்ளை கிளி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பறவைகளையும் பறவைகளுக்கு உணவு கொடுத்தும் பொதுமக்கள் தீபாவளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tourists-thronged-the-world-famous-thanjavur-big-temple-on-the-occasion-of-a-series-of-holidays/
தஞ்சையில் பெரிய கோயில், அரண்மனை வளாகத்தை அடுத்து சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருவது ராஜாளி பூங்கா . அங்குள்ள பஞ்சவர்ண கிளிகளுக்கு அவர்கள் தரும் சூரியகாந்தி விதைகளையும் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்து பறவைகளோடு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இது போல் இவ்வளவு பறவைகளை பார்த்ததே இல்லை என்றும் தீபாவளி விடுமுறையை கொண்டாட வந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.