- உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சிறப்பு வாய்ந்தது மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவிலின் கட்டிட கலையும் – சிற்ப கலையும் காண தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/various-special-abhishekams-were-held-in-thanjavur-temple-on-the-occasion-of-diwali/
பெரிய கோவிலின் அழகை கண்டு ரசித்தும், செல்போனில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தும் ரசித்தனர். மேலும் பெருவுடையாரை பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.