உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.
இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி உள்ளனர். இதில் 60 பேர் கீழே இறங்கி விட்டதாகவும் 4க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு துறையினர் ரயில் பெட்டியினை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 9 பேர் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு நிலவரத்தை கேட்டறிந்தார். மேலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து காயம் அடைந்த சகா பயணிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.