பழனி முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு திட்டத்தில் பக்தர்களுக்கு புதிய டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த முறையில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரையடுத்து இந்த டோக்கன் முறையை தமிழக அரசு அமல் படித்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நாள் முழுவதும் அன்னதான திட்டம் துவக்கபட்டு செயல்பட்டு வருகிறது.இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு இல்லாமல் போனது.

பழனி முருகன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் அப்படி வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இதன்படி காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை. மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சாமி தரிசனம் செய்யும் மக்களுக்கு அன்னதானம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தினமும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான பக்தர்கள் அன்னதான முறையை பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் புதிய டோக்கன் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பழனி முருகன் கோவிலிலும் புதிய டோக்கன் முறை அமலுக்கு வந்தது. அதன்படி, கோவிலில் அன்னதானம் பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது.ஒரு குழுவிற்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை 210 பக்தர்களுக்கு டோக்கன் வழங்கபடுகிறது.
இதன்மூலம் தினமும் நடைபெறும் அன்னதானத்தில் எத்தனை பக்தர்கள் பங்கேற்றனர் என்பதை தெரிந்து கொள்வதுடன், முறைகேடுகளை தடுக்க ஏதுவாக அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த அன்னதான திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தடர்ந்து இந்த திட்டம் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு அரசு தங்கும் விடுதிகள் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிடத்தக்கது.