- தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதி.
- கழிவறைகளில் கதவு இல்லாத வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தஞ்சை மாவட்டம் மற்றும் திருச்சி ,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் ,நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில் அங்கு இருக்கும் கழிவறைகளில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் முக சுழிப்புடன் செல்ல வேண்டிய சூழ்நிலை
கழிவறையில் மற்றும் குளியல் அறைகளும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் நோய்களுக்கு மேலும் நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
உள்நோயாளிகள் தரப்பில் கூறுகையில், நோயாளிகள் வார்டுகளில் உள்ள கழிப்பறைகள் நாள்தோறும் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. இங்கு தங்கி சிகிச்சை பெறுவோர், மூக்கை பொத்திக்கொண்டே கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
சமீபத்தில், இங்கு 700-க்கும் மேற்பட்ட பல்நோக்கு ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சரியாக பணிக்கு வருகின்றனர். அவர்களில் பலர் சரியாக பணி செய்கிறார்களா என்பதை முதலில் கண்காணிப்பது அவசியம்” என்கின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாத வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது