பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி இன்று வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

2 Min Read
  • பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி இன்று 3 வார்டுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு, விளம்பர பதாகைளை கைகளில் ஏந்தி பேரணியாக புறப்பட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர் – தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதால்
    20,000க்கும்
    மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக சுரங்கைப்பாதை அமைக்க வலியுறுத்தல்

பேட்டி – பிரபாகனிஉதயகுமார் – நகராட்சி கவுன்சிலர்,
அண்ணாநகர், பட்டுக்கோட்டை.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் எல்.சி. 94 ரயில்வேகேட் பாதை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த பாதையை அண்ணாநகர், சீனிவாசன்நகர், சிவக்கொல்லை,
பூமல்லியார்குளம்,
ஆர்.வி.நகர், சந்திரசேகர்நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு காரைக்குடி – மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகளுக்காக ரயில்வே துறையால்
எல்.சி.94 ரயில்வே கேட் பாதை மூடப்பட்டது. இதனால் கடந்த 12 வருடங்களுக்குமேல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்வேகேட் இருந்த இடத்தில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள்
எல்.சி.94 பயனீட்டாளர் நல அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் நடத்திய தொடர் போராட்டத்தின் எதிரொலியாக ரயில்வேதுறை சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அதற்காக ரூபாய் 2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அந்த இடத்தில் இன்றுவரை சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை.
இதனால் பட்டுக்கோட்டை நகராட்சி 24, 25, 26 ஆகிய 3 வார்டுகள் மற்றும் அதன் பின்புறம் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் இன்று பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சாலை ரயில்வே கேட் பகுதியிலிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்த வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீயிடம், கோரிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். அப்போது பெண்களில் பலர், நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த எல்.சி 94 ரயில்வே கேட் பாதை மூடப்பட்டு விட்டதால் கடந்த 12 வருடங்களாக நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குறிப்பாக எங்கள் வீட்டு குழந்தைகள் காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் ரயில்கள் வருவதால் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல முடியாமல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உடனடியாக சுரங்கப்பாதை அமைத்துதர வேண்டும் என்றனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, உங்களுடைய கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்

Share This Article
Leave a review