அவசர அவசரமாக ஒப்புதல்., சம்பவம் செய்த ஸ்டாலின்..!

2 Min Read
ஆளுநர் ரவி

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் அவசர அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளார். அவர் இதற்கு திடீரென ஒப்புதல் அளித்துள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது திமுக விற்கு கிடைத்த வெற்றி. முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் அவரது கட்சிக்காரர்கள்.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதநிதிகள் சட்டப்பேரவையில் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வரும் ஆளுநர் ரவி, அவர் பணியை தவிர மற்ற அனைத்து பணிகளையும் செய்து வருவதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார் ஆளுநர் ரவி.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் செல்லும் இடமெல்லாம் சனாதான கருத்துகளை பேசுவதும், பாஜக ஆதரவாக பிரச்சாரம் செய்வதும் ஆளுநரின் இயல்பாக உள்ளது. அதை கண்டித்து ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர். இந்த சூழலில் தான் ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் மற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்து அவர் பேசியது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், ஸ்டெர்லைட்டுக்கு எதிரக மக்களை தூண்டிவிட வெளிநாட்டு பணம் பயன்படுத்தப்பட்டது எனவும், அது தன்னெழுச்சியாக நடைபெற்ற போராட்டம் இல்லை எனவும், ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட நிலுவையில் வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் பேசியது தமிழகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தியதோடு மட்டுமில்லாமல், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாக பேசியது தமிழக மக்களின் உணர்வுகளை பாதித்தாக கூறிய திமுக கூட்டணி கட்சிகள் வருகிற 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்தது முதல், நேரடியாக ஆளுநருக்கு எதிராக இதுவரை போராட்டத்தில் ஈடுபடாத நிலையில், முதல்முறையாக திமுக தலைமையில் போராட்டத்தை அறிவித்தது ஆளுநர் ரவிக்கு பின்னடவை ஏற்படுத்தியது.

அதேபோல் இன்று சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, ஆளுநர் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், இதை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏக்கள் காந்தி, சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய பாஜக எம்.எல்.ஏக்கள் அவைக்கு இன்று வரவில்லை.
முன்னதாக ஓபிஎஸ் இருக்கை விவகாரத்தை காரணம் காட்டி அதிமுக வெளிநடப்பு செய்தது.

அதைத் தொடர்ந்து 144 உறுப்பினர்கள் ஆதரவுடன், ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேறியது. இதுவும் ஆளுநருக்கு எதிரான பெருத்த அடியாகவே கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 2 முறை நிராகரித்த ஆளுநர் ரவி, தற்போது அவசர அவசரமாக ஒப்புதல் அளித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Share This Article
Leave a review