திருவண்ணாமலை தாலுகா துர்க்கைநம்மியந்தல்
கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன்.
இவர் நேற்று முன்தினம் மின்வெட்டு காரணமாக தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் படுத்து உறங்கினார். அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.
அப்பொழுது வீட்டின் பீரோ உடைந்து இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.பீரோ அருகே சென்று பார்த்தபோது தங்க நகைகள் மற்றும் வெள்ளி உபகரணங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பதை உறுதி செய்த பின்னர். அருகாமையில் உள்ள தாலுகா காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார்.
அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் புகாரியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.