திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் ஹரி பன்னிரெண்டாம்வகுப்பு மாணவன் தோல்வி பயத்தில் வீட்டில் சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சிலநாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
மார்ச் மாதம் 13-ம் தேதி +2 பொதுத்தேர்வுதொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்தன.
இந்நிலையில்தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித பாடப்பிரிவில் 12-ஆம்வகுப்பு படித்து வந்த மாணவன் ஹரிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து காலை ஏழு மணிஅளவில் தேர்வு தோல்வி பயத்தால் தனது வீட்டின் மாடியில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டிக் கொண்டு பரிதாபமாக இறந்தார்.வீடு திரும்பிய அவரதுதந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக்கண்டு அழுது துடித்தார்.

இதுகுறித்துதகவல் அறிந்து விரைந்து வந்த தானிப்பாடி போலீசார்மாணவன்ஹரியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காகதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் 6 பாடங்களில் 2 இல் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தேர்வின் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடமும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.