லட்சக்கணக்கான ரூபாய் பொருட்கள் சேதம்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பிரபு என்பவருக்கு சொந்தமான கழிவு பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென்று பற்றி எரியத் தொடங்கியது. மேலும் பிளாஸ்டிக் குடோனில் அருகே குடிசை மாற்று வாரியம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், வடமாநில ஊழியர்கள் தங்கும் குடிசை பகுதியில் பரவியதால் அங்கு வசிக்கும் வடமாநில ஊழியர்கள் பாதுகாப்பாக குடிசையில் இருந்து வெளியேறி தீயணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 5 க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

மேலும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்து கரும் புகை விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறியது. அதிக அளவில் புகை வெளியேறியதால் விண்ணில் புகையை பார்த்து மக்கள் தீ எறியும் இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.