திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அலகுமலையில் ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடங்கியது .இந்த ஜல்லிக்கட்டுவை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. இதற்காக கேலரி, வாடிவாசல், காயம் பட்டவர்களை மீட்டு முதல் உதவி செய்யும் அறைகள், காளைகள் பாதுகாப்புக்காக வெளியேறும் பகுதிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த 16ஆம் தேதி மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு துவங்கியது,காளைகளை அடக்க 500 மாடுபிடி வீரர்கள் களத்தில் கலந்துகொண்டனர்.

550 காளைகள் கலந்து கொன்றன.ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்தால் காயம் படாமல் இருப்பதற்காக தென்னை நார் கழிவுகள் கொட்டி சமன்படுத்தப்பட்டது,மாடுபிடி வீரர்கள் லாவகமாக தப்பிப்பதற்காகஇரண்டு பக்கமும் இரும்பு கிரில் கேட் அமைக்கப்பட்டுள்ளது,ஜல்லிக்கட்டு பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமாக 5000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் கேலரி வசதியும், அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.முன்னதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.விலங்குகள் கண்காணிப்பு குழுவில் இருந்து அதன் உறுப்பினர் மிட்டல் மற்றும் டாக்டர் அயுப்கான் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியினை கண்காணிக்கின்றனர்.அழகுமலை பகுதியில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.