Tirupattur-15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 62 வயது காமக்கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது..

2 Min Read

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்-அம்பிகா.

- Advertisement -
Ad imageAd image

மாதேஸ்வரன்-அம்பிகா தம்பதியர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நந்தினிபிரியா திருமணமாகி வாணியம்பாடியில் கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகளான காயத்ரி ( வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது பெரியங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தாய் அம்பிகா உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் அவரது தந்தை மாதேஸ்வரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாணியம்பாடி பகுதியில் இரண்டாவது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாய் தந்தை இல்லாமல் தனது பாட்டி சாந்தா வளர்ப்பில் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார் காயத்ரி.

இதையும் கொஞ்சம் படிங்க : https://thenewscollect.com/novel-protest-by-vck-party-members-by-tying-black-clothes-on-their-mouth-after-permission-denied-to-use-speakers-at-thanjavur-girl-gang-rape-protest/

பள்ளி மாணவி காயத்ரி வெளியில் சென்று வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவரான சேகர் தனக்கு சாதகமாக அவ்வப்போது அந்த மாணவியை அழைத்து தனது கடையில் சில பொருட்களை வாங்கி வரச் சொல்லி வந்துள்ளார்.

அவர் கொடுத்த பணத்தில் மீதியான பணத்தை மாணவியை எடுத்து கொள் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

இதனை வீட்டிற்கு பயந்து தனது பாட்டியிடமும் சொல்லாமல் மறைத்த பள்ளி மாணவிக்கு நேற்று வயிற்று வலி காரணமாக மின்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மாணவி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் அளித்துள்ளார்.

மேலும் பள்ளி மாணவியை மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பள்ளி மாணவி அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் முதியவர் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

பின்னர் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சேகர்(வயது 62).

தாய் தந்தை இல்லாமல் பாட்டி வளர்ப்பில் வளர்ந்து படித்து வந்த பள்ளி மாணவியை பணத்தைக் காட்டி ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு கர்ப்பமாக்கிய 62 வயது காமக்கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review