திருச்செந்தூர் குழந்தை கடத்தல் – போலீசாரிடம் சிக்கிய தம்பதியினர் – ஒரு மணி நேரத்தில் பெண் குற்றவாளி உயிரிழப்பு

2 Min Read
குழந்தை கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களான முத்துராஜ்-ரதி தம்பதியின் இவர்களது 1½ வயது ஆண் குழந்தை ஸ்ரீஹரிஸ்.இந்த தம்பதியினர் தனது குடும்பத்துடன் கடந்த 5-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர். கோயிலுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -
Ad imageAd image
சிசிடிவி காட்சி

பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.அப்போது தான் தெரிந்தது.கோவில் வளாகத்தில் வைத்து குழந்தையை 40 வயது மதிக்கத்தக்க பெண் கடத்தி சென்றுள்லார். இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்த்ராஜ் தலைமையில் 25 பேர் அடங்கிய 4 தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.பல இடங்களில் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.அதில் இரண்டு நபர்கள் குழந்தை கடத்தி சென்ரது தெரிய வந்தது.

திலகவதி கடத்தல்காரர்

இந்நிலையில் போலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில் உடனடியாக கோவை ஆலாந்துறை போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி குழுவினர் கொண்ட ஆலாந்துறை போலீசார் பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(43), திலகவதி(35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். பின்னர் ஆலந்துறை போலீசார் சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பாண்டியன்

இதனிடையே குற்றவாளியான திலகவதி கைது செய்யப்பட்டார் அவரிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட திலகவதி உடல் சோர்வுடன் காணப்பட்டார்.பின்னர் ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது மாரடைப்பால் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திலகவதியின் உடலை கோவை போளுவம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

குழந்தையை கடத்திய நபர்களை பிடித்து விசாரணை செய்யும் போது கடத்தல்காரர் இப்படி உயிரிழந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review