மதுபோதையில் ரகளை செய்த ராணுவீரரை மனிதாபமின்றி கட்டிவைத்து தாக்கிய இளைஞர்கள் , காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகிறது.
இதன்காரணமாக அவ்வபோது மதுபிரியர்களின் அட்டகாசங்கள் ஆற்றூர் சந்திப்பில் அரங்கேறுவது வழக்கம்.
இந்நிலையில் திருவட்டாரை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் ராணுவவீரரான ரெதீஷ்குமார்.
இவர் ஆற்றூரில் இயங்கிவரும் மதுகடைக்கு சென்று மது அருந்திவிட்டு தள்ளாடியபடி ஆற்றூர் சந்திப்பில் சாலையில் சென்றவர்களிடம் வாய்தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் மது போதையிலிருந்த ராணுவவீரர் ரதீஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு மிதித்ததோடு மட்டுமல்லாமல் மனிதாபமின்றி அப்பகுதியிலிள்ள இரும்பு தூணில் கட்டிவைத்தும் தாக்கினர் .
இதையடுத்து சுமார் 2மணிநேரம் தாமதமாக வந்த திருவட்டார் காவல்துறையினர் தூணில் கட்டபட்டு ரத்தகாயங்களுடன் கிடந்த ராணுவவீரரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தொடர்ந்து ராணுவவீரர் அளித்த புகாரின் அடிப்படையில் ராணுவவீரர் ரதீஷ்குமாரை தாக்கிய இளைஞர்களை தேடிவருகின்றனர்.
பட்டபகலில் மதுபோதையில் சாலையில் தகராறு செய்த ராணுவவீரரை இளைஞர்கள் சிலர் தாக்கியது கண்ட பொதுமக்கள் சிலர் தடுத்ததால் இளைஞர்கள் அந்த ராணுவவீரரை உயிரோடு விட்டனர் என்பது குறிப்பிடதக்கது நாட்டின் எல்லையில் நம்மை பாதுகாக்கும் ராணுவவீரருக்கு சொந்த ஊரில் இளைஞர்கள் அளித்த மனிதாமின்றி இழிவுபடுத்திய செயலால் வெட்கி தலைகுனியும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.