விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் சகலக்கலாதரன்.
இவர் மீது பல புகார்கள் இருந்த நிலையில் , ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து கொண்டு அம்மாணவியை , தனது அறைக்கு தனிமையில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார், மேலும் இனிப்பு வழங்கிய கையோடு , மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி நடந்த சம்பவத்தை பற்றி சக மாணவிகளிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விசாரணை செய்வதற்காக தலைமை ஆசிரியரை காவல் நிலையம் அழைத்து செல்ல வாகனத்தில் ஏற்றியபோது , அங்கிருந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசார் முன்னிலையில் தலைமை ஆசிரியரை கடுமையாக தாக்கினர்.
ஒரு வழியாக தலைமை ஆசிரியரை அவர்களிடமிருந்து மீட்டு விசாரணைக்காக திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் தலைமை ஆசிரியர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை போலீசார் கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் அவரது சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாணவியரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள். காவல் காவல் நிலையத்திற்கு சென்று தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் காவல் நிலையம் வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களை போலீசார் தடுத்த நிறுத்தி முக்கிய நபர்கள் மட்டும் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று காவல் நிலையத்தில் உள்ள அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மற்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
இருப்பினும் தலைமை ஆசிரியர் கைது செய்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று மாணவியின் உறவினர் திடீர் என்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்ததால் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனை அடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து. சகலகலாதனை கைது செய்தனர்.
இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் மாணவியின் தோழிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மாணவரிடம் சகல கலாதரன் சிலுமிஷத்தில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தது பின்னர் இது தொடர்பான விசாரணை அறிக்கையை அவர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு வழங்கினார். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சகலகலாதனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ண பிரியா உத்தரவிட்டுள்ளார்.