- தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் லாரியில் ஏற்றி இருந்த ரேஷன் கடைக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூட்டைகளை மினி ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிய மூன்று பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மொத்த கிடங்கு உள்ளது. இங்கு ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 50 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 பேர் மினி லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சுமார் 50 மூட்டைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/on-the-occasion-of-the-third-saturday-of-the-month-of-puratasi-a-special-decoration-deeparathan-was-held-at-arulmiku-sri-prasanna-venkatesa-perumal-temple/
அந்தப் பகுதியில் ரோந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் வாகனங்களையும் ஆவணியாபுரம் மதினா தெருவை சேர்ந்த முகமது பைசல் வயது 33 திருபுவனம் காங்கேயம் பேட்டை புது தெருவைச்சேர்ந்த சுபாஷ் வயது 33 சூரியனார் கோயில் வடக்கு தெருவைச்சேர்ந்த கண்ணதாசன் வயது 33 ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.