வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது, 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

2 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

தமிழகத்தில் பல இடங்களில் திருட்டு,கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குற்றவாளிகளை சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர்.அப்படி தான் கருமத்தப்பட்டியில் ஒரு சம்பவம்.சிசிடிவி காட்சிகள் மூலமாக மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
சிசிடிவி காட்சிகள்

கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதை தொடர்ந்து இருசக்கர வாகன உரிமையாளர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சோமனூர் சந்தைப்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் குறிப்பிட்ட நபர்கள் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது சிசிடிவி கள் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கருமத்தம்பட்டி சேர்ந்த விஜய் (30) சோமனூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் (22) கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னராஜ் (27) ஆகிய மூவரையும் கைது செய்த கருமத்தம்பட்டி போலீசார் மேலும் இருசக்கர வாகனங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.இவர்கள் பல இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

இப்பகுதியில் திருடப்படும் இரு சக்கர வாகனங்களை விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் விழுப்புரம் பகுதியில் இருந்த 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் .இதனை அடுத்து மூவரையும் கைது செய்த கருமத்தம்பட்டி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு இரண்டு நாட்களில் இருசக்கர வாகன திருடர்களை கைது செய்த கருமத்தம்பட்டி போலீசாரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர். மேலும் கருமத்தம்பட்டி போலீசார் கூறுகையில் அனைத்து பகுதிகளிலும் சி சி டிவி கேமராக்களை பொதுமக்கள் பொருத்தினால் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில் குற்றவாளிகளை வெகுவிரைவாக பிடிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் எனவே அனைத்து பகுதிகளிலும் சிசி டிவி கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a review