தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அப்பொழுது காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அதிகாரிகளும் அகற்றாமல் இருந்தனர். இது பொதுவாகவே அந்த பகுதியில் நடக்கும் சம்பவம் ஆகும். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா திண்டல் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒடச்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மாது இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு பெருமாள் என்ற ஒரு மகன் உள்ளனர்.
இன்று காலை மாதம்மாள் தனது வீட்டில் அருகே உள்ள மரத்திலிருந்து இபி கம்பத்தில் வரும் துணை கம்பியில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்ததை பார்த்திருக்கிறார். இந்த அறுந்த கம்பியை மீண்டும் எடுத்து கட்டுவதற்காக மாதம்மாள் கம்பிகளில் போடும்போது ஏற்கனவே இபி கம்பத்திலிருந்து பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு மாதம்மாள் கணவர் மாதுவின் சகோதரி சரோஜா மற்றும் மாதம்மாள் மகன் பெருமாள் ஆகியோர் மகனை காப்பாற்ற சென்றபோது,
உடன் அவர்களும் மின்சாரம் தாக்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பிரேதங்களையும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரிமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் உள்ளிட்ட மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.