விருதுநகர் விபத்து மூன்று பேர் பலி

1 Min Read
உயிரிழந்தவர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  கட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் சங்கரி தம்பதியினர். இவர்களுக்கு ஆனந்தராஜ் என்ற மகன் உள்ளார் . சங்கரி தனது மகன் ஆனந்தராஜ் உடன் இரு சக்கர வாகனத்தில் அருப்புக் கோட்டையில் இருந்து சொந்த வேலையாக விருதுநகருக்கு சென்று உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது விருதுநகர் அருகே ஆனந்தராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த பாலவநத்தம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (28) என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவருக்கு பின்னால்  அழகுமணி (18) அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆனந்தராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த சங்கரி சங்கரியின் மகன் ஆனந்தராஜ் மற்றும் ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மூன்று பேரின் உடல்களை  மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் அழகுமணி படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித் மற்றும் அழகுமணி இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது

மேலும் இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review