கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பயணிகள் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் , 9 பேர் படுகாயம் பயத்தில் ரயிலிலிருந்து குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் சென்று கொண்டிருந்த விரைவுவண்டி ரயிலில் மர்ம நபர் தான் கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில் பெட்ரோலில் ஒரு பாட்டில் பெட்ரோலை எடுத்து பயணிகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஒன்பது ரயில் பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைப் பார்த்த அதிர்ச்சியில் பயந்து போய் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் ரயிலிலிருந்து வெளியேற முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று இரவு 9 மணிக்கு கோழிக்கோடு அருகே உள்ள இத்தூர் கோரப்புழா பாலத்தில் வந்தபோது நடந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் கோழிக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அங்கிருந்து இறங்கி சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவருடன் தப்பி உள்ளார். தற்போது குற்றவாளி தப்பிச்செல்லும் சிசிடிவி காணொளியை வெளியிட்டுள்ள போலீசார் சக பயணிகள் அளித்த தகவலின் பேரில் பென்சிலில் வரைந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இது தீவிரவாத செயலா என்று கோணத்திலும் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கோழிக்கோடு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாத சதியா :
சந்தேகப்படும் நபர் எனக் கூறப்படும் ஒருவரின் பையிலிருந்து இந்தி, ஆங்கிலக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ரயில்வே போலீசார் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர்.
கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் நாட்குறிப்பில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பையிலிருந்த நாட்குறிப்பில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
தீயைக் கண்டதும் ஓடும் ரயிலிலிருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர்.