கேரள மாநிலம் களமசேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.25க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.சம்பவ பகுதியில் தேசிய பாதுகாப்பு முகமை, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், மாநில போலீசார் என பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 குண்டுகள் வரை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இன்று தேவாலயத்தில் நடந்த வெடி விபத்து நடந்தது இதை அடுத்து அந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது வெடி விபத்து தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கேரள டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் வெடித்தது குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணையும் நடந்து வருகிறது.
களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது மூன்று இடங்களில் வெடி விபத்துகள் ஏற்பட்டதாக தேவாலயத்தின் உள்ளூர் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். காலை தொழுகை முடிந்த உடனேயே மண்டபத்தில் முதல் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை என மூன்று தடவை வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இன்றைய நிகழ்ச்சிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 9.40க்கு பூஜை நடந்தது.
தொழுகை முடிந்ததும் மண்டபத்தின் மையப்பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் ஹாலில் நின்று கொண்டிருந்தனர். அடுத்தடுத்து மூன்று முறை வெடிப்பு நிகழ்ந்தது. முதல் வெடிப்புக்குப் பிறகு, மண்டபத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டது. ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உடனடியாக உயிரிழந்தார். மண்டபத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எரிவாயு அல்லது அது போன்ற எதுவும் இல்லை. இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்தன. அதிலிருந்து ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலும், அதுபோன்ற வெடிப்பு ஏற்படாது என்றும், தற்போது சம்பவம் நடந்த இடத்தஒ போலீசார் சீல் வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கேரள வெடி விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு. வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த அமித்ஷா. என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்ல அமித்ஷா உத்தரவு. வெடி விபத்து குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ.க்கு அமித்ஷா உத்தரவு. 2,500 பேர் கூடியிருந்த கிறிஸ்தவ கூட்டரங்கில் பயங்கர வெடி விபத்து.
கேரள மாநிலம் களமசேரி பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்து எதிரொலி . கொச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் – கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மார்டின் என்பவர் வீடியோ ஒன்ரை வெளியிட்டுள்ளார்,அந்த வீடியோவில் தேவாலையம் மக்களுக்கு எதிராக மேலும் அவர் தேவாலையத்தின் உறுப்பினர் என்றும் தெரிவ்த்துள்ளார் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.