ஆடம்பர காரில் சொகுசாக வலம் வந்து ஆளில்லாமல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைத் திருடி செல்லும் மூன்று பேரை போலீஸார் கைது.மன்னார்குடியில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய மூவர் சிறையிலடைப்பு .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைரகோபுரம் பகுதியை சேர்ந்த அராபத் வயது ( 28 ), காரைக்குடி அருகே மஜா தோப்புதிடல் ஆறுமுகம் வயது ( 52 ), காரைக்குடி அருகே ஒத்தகடை செல்வராஜ் வயது ( 55 ) ஆகிய மூவரும் இன்னோவா சொகுசு காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் அடுத்த செங்குளம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் இரண்டு ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன.

முத்துபேட்டை சாலையில் இரண்டு ஆடுகள் என மொத்தம் நான்கு ஆடுகளையும் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் சொகுசு காரில் வலம் வந்து ஆளில்லாமல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைத் திருடிக்கொண்டு கும்பகோணம் சாலையில் செல்வதற்காக அண்ணவாசல் சேனிய தெருவில் வரும் போது அப்பகுதியில் ஆடுகள் இருப்பதை கண்டு வாகனத்தை மெதுவாக சாலை ஓரம் கட்டிய போது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர்.
வாகனத்தை சோதனையிட்ட போது சொகுசு வாகனத்தில் ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது . உடனடியாக மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு விபரத்தை தெரிய படுத்திய உடன் உடனடியாக விரந்து வந்த காவல்துறையினர் மூவரையும் அழைத்து கொண்டு டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ அந்தோணி அதிகாரி முன்பு நிறுத்தபட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணை அடிப்படையில் மூவரும் நான்கு ஆடுகள் திருடியதை ஒப்புகொண்டனர் .விசாரணையில் மூவரின் பெயரிலும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது . மன்னார்குடி காவல்துறையினர் சொகுசு கார் மற்றும் நான்கு ஆடுகளையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர் .