“கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்னவர்கள் காணாமல் போய்விடுவார்கள்” – முதல்வர் ஸ்டாலின்

0
99
முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு தோல்வியால்  உயிரிழந்த தந்தை , மகனுக்கு தமிழ் நாடு முதலமைச்சார் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் .  விரைவில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் இதற்காக மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குளாகிய தந்தை மகன் தற்கொலை சம்பவத்திற்கு தனது சமூக வலைதள பக்கங்களில்  இரங்கல் தெரிவித்துள்ள தமிழ் நாடு முதல் அமைச்சர் ,  இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும் , கையெழுத்துப் போட மாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று கடுமையாக பாஜக அரசை விமர்சித்துள்ளார் .

மேலும் அவரது இரங்கல் பதிவில் ” நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை  மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் ஜெகதீஸ்வரன் தந்தை செல்வ சேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்து விட்டது மிக கொடூரமான நிகழ்வாகும்.

ஒருமுறை அல்ல இரண்டு முறை நீட் விளக்கு மசோதாவை நிறைவேற்றி மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம் முதலில் காலம் கடத்தி திருப்பி அனுப்பினார்.

இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும் ஆனால் அதனை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பதுதான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணம் ஆகும்.

ஆன்லைன் சூதாட்டம் மசோதாவுக்கு கையெழுத்து போடாமல் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களையே சந்தித்தார் இப்பொழுது நாள்தோறும் மாணவர்களை வரவழைத்து கோச்சிங் சென்டரை போல பாடம் நடத்தி வருகிறார்.

அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டபோது நீட்விளக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் சொல்லியிருப்பது அவரது அறியாமையை தான் காட்டுகிறது.

இந்த சட்டத்தை பொறுத்தவரையில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை ஏதோ அதிகாரம் இருப்பதைப் போல அவர் காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை.

இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும் , கையெழுத்துப் போட மாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.

மாணவன் ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் ஆகிய இருவரது மறைவிற்கும் எனது ஆழமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களது மரணமே நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும் .

அறிவுமிகு மாணவ கண்மணிகளே உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது தன்னம்பிக்கை கொள்ளுங்கள் வாழ்ந்து காட்டுங்கள் பிறரையும் வாழ வையுங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்  .” என்று தெரிவித்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here