கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பகுதியில் அமைந்துள்ள ஆதிஅமரநாயகி உடனமார் ஆதிசங்கரர் திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா நாளை நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு வேதிகார்ச்சனை, மூன்றாம் கால யாக வேள்வி, யந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று இரவு நடைபெற்றன. இவ்விழாவில்
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் கோயிலில் நடைபெற்ற யாக வேள்வியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகம் ஆன்மீக பூமி, கோயில்கள் நன்றாக பராமரிக்க வேண்டும். கோயிலுக்கு அதிக செலவு செய்ய வேண்டும் . கிராமங்களில் ஆன்மீகம் தழைத்து ஓங்க வேண்டும். எனவேதான் ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் நடைபெறும் ஆன்மீக விழாவிலும் நான் கலந்து கொள்கிறேன்.
வயதில் சிறியவராக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் காலில் விழுவேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.யோகி ஆதித்யநாத் சன்னியாசியா இல்லையா என முரசொலி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. யோகி ஆதித்யநாத்க்கு இவர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 5 முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
சன்னாக இருந்து பதவிக்கு வரவில்லை. சன்னியாசியாக இருந்து பதவிக்கு வந்துள்ளார். சன்னாக இருப்பதால் பதவிக்கு வருபவர்களுக்கு சன்னியாசியாக இருந்து பதவிக்கு வருபவர்களை பற்றி தெரியாது. சுய உழைப்பில் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து யோகி பதவிக்கு வந்துள்ளார். தான் நினைப்பதை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என நினைப்பது ஜனநாயகமா சர்வதிகாரமா என்றார்.