தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் லூர்து பிரான்சிஸ். அவர் மணல் கடத்தும் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . இதனை கண்டித்து நான்கு மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சோளிங்கர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை கொடூரமாக வெட்டிக் கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மேலும் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி இழப்பீடும், மேலும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி பாதுகாப்பின் சட்டத்தின் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் ஆற்காடு ,நெமிலி மற்றும் அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க சார்பில் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும், கொலையாளிகள் மீது கடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.