கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எம்.பி கனிமொழி

2 Min Read
செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமப் பகுதிகளில் தாமிரபரணி அருகில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில்  செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் ஆற்று மணலை போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் நேற்று பிற்பகலில் இரண்டு மர்ம நபர்களால் வெட்டி  கொலை செய்யப்பட்ட அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அவரது உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறினர் தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கினார் முன்னதாக கனிமொழி எம்பி செய்தியாளர் அளித்த பேட்டியில்

மிகச் சிறப்பாக தன்னுடைய பணியை செய்யக்கூடிய அதிகாரிக்கு நேர்த்த சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

விரைவில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை குறித்து உறுதி அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சரியான தண்டனை தரப்படும்  என கூறினார்.

Share This Article
Leave a review