இது தேர்தல் அல்ல இரண்டாவது சுதந்திரப்போர்-அப்துல் சமது

2 Min Read
வாக்கு சேகரிப்பு

தேர்தல் இந்த திமுக அதிமுகவிற்கு இடையே நடக்கிறது தேர்தல் அல்ல. இரண்டாம் சுதந்திர போர். மோடி ஆட்சிக்கு எதிரான தேர்தல். மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது பேச்சு.

- Advertisement -
Ad imageAd image

நடைபெற இருக்கிறது தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல இது ஒரு சுதந்திரப் போர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி எந்த சாதனையும் செய்யவில்லை மாறாக போதனைகளும் வேதனைகளும் தான் செய்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு வேலைவாய்ப்பு திண்டாட்டம் போன்ற மக்கள் மீதான பொருளாதார தினிப்புகள் தான் நடந்துள்ளது. இந்த ஆட்சியில் தான் முதலமைச்சர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் பெரு முதலாளிகள் மிரட்டுகிற கட்சியாக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. கொரோனா காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு கூட கட்டணம் வசூலித்தது பிஜேபி ஆட்சி.நீதி மன்றம் இதை கடுமையாக கண்டித்தது.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் ஆபத்தானது பிறந்தநாள் சான்று இருக்க வேண்டும் என்கிற அந்த முக்கியமான கருத்து மிகவும் ஆபத்தானது. எனக்கு பிறந்தநாள் கிடையாது என்னை பள்ளியில் சேர்க்கும் போது பிறந்த நாள் குறிப்பிட வேண்டும். என்னுடைய தகப்பனார் திமுக காரர் அவருக்கு தெரிந்த பிறந்த தினம் கலைஞர் பிறந்த தினம் அதேதான் எனக்கும் பிறந்த தினம் என்று என்னுடைய தகப்பனார் பதிவு செய்திருந்தார். சட்டமன்ற உறுப்பினரான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி இருக்கும்.விவசாயிகள் மீது 3 வேளாண்சட்டங்களை தினித்தது.இந்த நாட்டில் ஒரு வருடம் இந்த ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகுதான் மூன்று சட்டங்களையும் பாஜக அரசு திரும்ப பெற்றது எனவே தான் இந்த தேர்தல் மோடி ஆட்சிக்கு எதிரான தேர்தல் இரண்டாம் சுதந்திரப் போர் என்பதை புரிந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார் கூட்டத்தின் இடையே தொழுகக்கான அழைப்பு ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டம் சிறிது நேரம் அமைதி காத்தது.ஏராளமான இஸ்லாமிய பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் பற்றி எடுத்து கூறினார்.

Share This Article
Leave a review