திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் போதிய இடவசதி இல்லாததால் திடீரென பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சுற்று வட்டார பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதுமான இட வசதி இல்லாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலைகளில் இரண்டு புறங்களையும் ஓரத்தில் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருந்தனர்.
நெல் மூட்டைகளை வாங்க வியாபாரிகள் கடந்த சில நாட்களாக வராததால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தன. இந்த நிலையில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இன்று திடீரென பெய்த கனமழையால். விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் நடந்ததால். விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை மாற்று இடத்தில் இயங்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்,