திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஊத்துக்காடு ஊராட்சி பள்ளிக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அடிக்கல் நாட்டினார்.
வலங்கைமான் அருகே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஐம்பெரும் விழாவில்
ரூ. 20 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்திற்கு திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் அடிக்கல் நாட்டினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான இரண்டு அடுக்கு வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா, முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 700 மரக்கன்றுகள் நடும்விழா, இலவச மருத்துவ முகாம், பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா என ஐம்பெரும் விழாவாக நடைபெற்றது.
இதில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு
புதிய பள்ளிக்கூட கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “வேடசந்தூர் துப்பாக்கி சூட்டில், ஒரு யூனிட்டுக்கு மின்சாரத்திற்கு விவசாயிகள் ஒரு பைசா குறைத்து கேட்டதற்கு 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது அதிமுக ஆட்சி. 1989 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதி அளித்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கியவர் தான் கலைஞர் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இலவச மருத்துவ முகாமும், 700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், தட்சிணாமூர்த்தி, ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.