திருவாரூர் மாவட்டத்தில் தலைக்கேறிய போதை இளைஞர்கள் கைது

2 Min Read
போதை ஆசாமி

தலைக்கேறிய போதை உடன் அரசு மருத்துவமனைக்கு வந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனக்கூறி காவலரை வீண் வம்பு இழுத்த இளைஞர்கள் கைது. காவலரை இளைஞர்கள் வம்பு இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

சமீப காலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் என போதை பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியான ஒரு சம்பவம் தான் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடந்தது.

கைது செய்யப்பட்டவர்

இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த சம்பவம் தமிழகம் வாழ்வதற்கு இடமாக இல்லை என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்று சொல்லுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மிகப்பெரிய விபரீதத்தை நோக்கி தமிழகம் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்கிறார்கள். மாவட்ட காவல்துறையினர் இது போன்ற போதை பொருள் விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களை கைது செய்தால் தான் இது போன்ற சம்பவங்கள் நிகழாது எனவும் கருதுகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் அரசு மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த காவலரை வீண் வம்பு இழுத்த காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது..திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிராஜன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என தகராறு செய்துவிட்டு காயத்துக்கு உரிய டிஞ்சரை எடுத்து போட்டுவிட்டு அதன்பின் தலைக்கேறிய மதுபோதையின் காரணமாக அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தகாத வார்த்தைகளில் பேசி அவரை வீண் வம்பு இழுத்து அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார்கள்.இந்த காட்சியை அந்த மருத்துவமனைக்கு வந்த நபர் தன்னுடைய அலைபேசியில் எடுத்து அதனை இணையத்தில் பரப்பி உளளார். அந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.காவலரை தகாத வார்த்தைகளில் பேசி வீண் வம்பு இழுத்த அரவிந்தன் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Share This Article
Leave a review