திருவையாறு காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா

0
45
காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா

தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தின் பல பகுதிகளில் ஆண்டுதோறும்  கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று திருவையாறு காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள், பெண்கள் புனித நீராடி, பழங்கள். காதோலை கருகமணி, மாங்கல்யம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து  வழிப்பட்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றுவது வழக்கம் குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அதே போன்று ஆடிப்பெருக்கு விழாவின் போது புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபடுவர்.ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் பொங்கிவரும் காவிரியை வரவேற்று.  காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18ம் தேதி பெண்களின் வழிபாடாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கொண்டாடப்படுகிறது. இதன்படி, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் கூடிய பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள்,  புனித நீராடி, பழங்கள், காதோலைகருகமணி , மாங்கல்யம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து, பெண்கள் அதனை சுற்றி வந்து தீபம் ஏற்றி வழிபட்டனர். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டு, வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டனர். புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆறு ஓடும் பகுதிகளில் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதனால் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.சிரியவர் முதல் பெரியவர் வரை ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here