திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன். என்பவர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் .
பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி அனுப்பிரியா தனது வீட்டை விட்டு வெளியேறி திருக்குமரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
மின்னூர் கிராமத்தில் உள்ள திருக்குமரனின் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில். திருக்குமரன் மதுவுக்கு அடிமையானதால் தன் நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு ஏதும் செல்லாமல் தினமும் மது அருந்துவதையேு வேலையாக வைத்திருந்தார் , தினமும் மது அருந்திவிட்டு வீடு திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதனால் அன்றாட வீட்டு தேவைகளுக்குக் கூட பணம் தராமல் திருக்குமரன் இருபதை கண்டு தனது வேதனையை அக்கம் பக்கத்தினர் இடம் கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் அனுப்பிரியா.
மேலும் தான் ஒரு தவறான வாழ்க்கையை தேர்ந்துஎடுத்துவிட்டோம் என்றும் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காதல் கணவன் த.ன்னைவிட மது மேல் அதிகம் நாட்டம் உள்ளதை அறிந்து அதை நினைத்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
கணவனை திருத்தும் முயற்சியில் தான் தோல்வி அடைந்ததாக முடிவு செய்த அனுப்பிரியா , வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர். உயிரிழந்த அனுப்பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமான 25 நாட்களிலேயே காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதாவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் இளம் பெண்ணின் பெற்றோர் மத்தியிலும் அப்பகுதி மக்களிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.