திமுக-காரன் என்று விமர்சித்த செய்தியாளர் – பொங்கிய திருமா .

2 Min Read
திருமாவளவன் - ஸ்டாலின்

திமுக-காரன் போல் பதில் சொல்லாதீர்கள் என்று நிருபர் ஒருவர் விமர்சனம் செய்ததால் கோபத்தின் உச்சத்தை அடைந்த திருமாவளவன் , பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலே முடித்துக்கொண்டு சென்றுவிட்டார் .

- Advertisement -
Ad imageAd image

இன்று தலைமை செயலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “ சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதை கண்டித்து மீனவர்கள் நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் மறியலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களை நான் சந்தித்து பேசினேன்.

இன்றைக்கு அது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் எடுக்கப்பட இருக்கிறது, விவாதிக்க இருக்கிறோம் என்று முதல்வர் கூறினார். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசியதாகவும், நீதிமன்றத்திலும் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அரசு தரப்பில் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கொட்டிய விவகாரம் தொடர்பாக பேசுகையில் , ‘உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து இருக்கிறது. அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். அரசு அந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் முயற்சியில் இல்லை. அந்த விவகாரத்தில் புலனாய்வு அதிகாரிகளிடம் தேக்கம் காணப்படுகிறது. அந்த தேக்கத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.” என்று பேசினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அவரை பார்த்து ‘திமுக-காரன் போல பேசுகிறீர்களே’ என்று விமர்சித்தார் , அதைக்கேட்டு கோபமடைந்த திருமாவளவன், “ இதுபோன்று கண்ணியம் தவறிய வார்த்தைகளை செய்தியாளர்கள் உபயோகிக்க கூடாது என்று கண்டித்தார் மேலும் அவர் சாடுகையில் இது நாகரிகம் இல்லாதப் பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள் என்று எச்சரித்தார்.

அத்துடன் இது கேள்வி கிடையாது; உண்மையை கொண்டு வந்து கேள்வியாக வைய்யுங்கள். உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். ஊடகவியலாளர்களுக்கு என்ன மரியாதையோ அந்த மரியாதையை கொடுக்கிற அளவுக்கு கேள்விகள் இருக்க வேண்டும் என்று கூறிய அவர் , திமுக வை எதிர்த்து எங்களைப்போன்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. தலித் பிரச்சினைகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். நாளை கூட கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

திமுக கூட்டணியில் இருப்பதால்,இப்படியெல்லாம் அநாகரிகமாக பேசக்கூடாது. அப்போது அங்கிருந்த நிருபர்கள,  இதற்கு ஏன் ஆவேசமடைகிறீர்கள் ‘ஏன் கையை நீட்டி பேசுகிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினர்’. உடனே திருமா அப்படியென்றால் கையைக் கட்டிக்கொண்டு பேசவா? ஊடகவியலாளர்கள் முன்னிலையில் குனிந்து பேச வேண்டுமா? என்று  கூறி பத்திரிகையாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார் .

இந்த சம்பவம் தலைமை செயலக வளாகத்தில் பேசும் பொருளாக ஆனது .

Share This Article
Leave a review