பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி. அவர் அருகிலுள்ள இறையுரு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றுள்ளார் .
காட்டுச் செல்லூர் பஸ் நிறுத்தம் வந்தவுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய மாணவி தனது வீட்டிற்கு நடந்து செல்வதை கவனித்த அதே பகுதியை சேர்ந்த ராக்கி என்கிற அய்யனார் வயது 29. மாணவியை வழிமறித்து மாணவி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் வாயில் துணியை திணித்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .
மேலும் இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் அந்த சிறுமியையும் அவரது பெற்றோராயும் கொலை செய்து விடுவேன் என்ற கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுளார் .
அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்ற மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறி அழுதார் இதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .
புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராதிகா , மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குற்றவாளி ராக்கி என்கிற ஐயனாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
16 வயது பள்ளி மாணவி கடத்தி , பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .