கிரிவல பக்தர்களிடம் திருஷ்டி கழிப்பதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட திருநங்கைகள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயில் என்றாலே நினைவுக்கு வருவது 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் தான்.இந்த கிரிவலப் பாதையில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்களும், கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம்.

கிரிவலம் வரும் பக்தர்களிடம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு வருகை தரும் திருநங்கைகள் ஆங்காங்கே நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், திருஷ்டி கழிப்பதையும் வழக்கமாக கொள்வதுடன் அவ்வாறு திருஷ்டி கழிப்பவர்கள் இடம் பணத்தையும் தட்டிப் பறிக்கும் சூழல் அதிகமாக இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் அவர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் ரமணாஸ்ரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த திருநங்கைகள் ஆந்திர பக்தர் குடும்பத்தினரிடம் திருஷ்டி கழிப்பதாக கூறி 3500-ரூபாய் பறித்ததால் ஆந்திர பக்தர் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

பக்தர்களின் அலறல் சத்தத்தை கேட்ட காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று திருநங்கையிலிடமிருந்து அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.மேற்கு காவல் நிலையத்தில் வந்த திருநங்கைகள் காவல்துறையினரை ஒருமையில் பேசியதுடன், பெண் காவலர் அதனை வீடியோ எடுத்த சமயத்தில் அவரை மிரட்டும் தோணியில் செல்போனை பறிக்க முயற்சித்துடன் தகாத செய்கையை காட்டியது அங்கிருந்து அனைவருக்கும் முகம் சுளிக்க வைத்தது.
தொடர்ந்து தான் திருநங்கை என்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்த உங்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களது செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கூறிய பக்தர்கள் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது போன்ற தகாத முறையில் நடந்தால் திருநங்கைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டு புகார் அளிக்காமல் பக்தர்கள் அங்கிருந்து சென்றார்.