மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு,சாத்தான்குட்டை தெரு பகுதிகளில் கைக்கிள்களை திருடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜ்கபூர்.இவருக்கு பிரவீன்ராஜ் என்கிற மகன் உள்ளார்.இவ்வாண்டு 12ஆம் வகுப்பு பயிலவிருக்கும் பிரவீன்ராஜிக்கு அவரது தந்தை பள்ளிக்கே சென்று வர கியர் சைக்கிள் என்று சொல்லப்படக்கூடிற 11ஆயிரம் ரூபாய் மதிப்புடைய உயரக சைக்கிள் ஒன்றை வாங்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பிரவீன் ராஜ் கடந்த 7ஆம் தேதியன்று இரவு தனது சைக்கிளை தனது வீட்டின் எதிரே பூட்டிவிட்டு சென்றுள்ளார்.பின்னர் 8-ஆம் தேதி காலை வந்து பார்த்த போது தனது சைக்கிளை காணாததை கண்டு பிரவீன்ராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார்.இதனையெடுத்து அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது நள்ளிரவில் லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தும் எவ்வித அச்சமுமின்றி சைக்கிளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இதனையெடுத்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பிரவீன்ராஜன் தந்த ராஜ்கபூர் புகார் அளித்துள்ளார்.இதே போல் 7-ஆம் தேதி மாலை சாத்தான்குட்டை தெருவில் இதே போல் லுங்கி அணிந்துவந்த மர்ம நபர் ஒருவர் சைக்கிளின் உரிமையாளரை போல உரிமையோடு பட்டபகலில் எடுத்து சென்றிருக்கிறார்.இந்த நிலையில் இவ்விரண்டு இடங்களிலும் சைக்கிள்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இதே போன்ற காஞ்சிபுரம் பகுதியில் பல இடங்களில் சைக்கிள்கள் திருடு போவது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து மிக விரைவில் இந்த குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.