உதகையில் அருகே ஒன்பதாம் மைல் பகுதியில் வசிப்பவர் குட்டன் தோடர் இவர் பழங்குடியினர். இவரது 14 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10 வகுப்பு படிக்க இருக்கிறார். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல வழக்கம்போல் H.P.F பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள ராஜேஷ் குட்டன் என்ற தோடர் பழங்குடியின இளைஞர் காரில் வந்துள்ளார். தான் வீட்டிற்கு செல்வதாக கூறிய இளைஞர் சிறுமியையும் வீட்டில் விட்டுவிடுவதாக கூறியதையடுத்து சிறுமியும் காரில் ஏறிச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் சிறுமியின் தாயாரும் குடும்பத்தினரும் சிறுமியை தேடி உள்ளனர். அப்போது வனப்பகுதியில் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற இளைஞரின் கார் இருப்பதைக் கண்ட குடும்பத்தினர் சிறுமியின் புத்தகப் பையை கண்டுள்ளனர்.
பின்பு வனப்பகுதியில் தேடிப் பார்க்கும் பொழுது புதர் பகுதியில் சிறுமி மயங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கிராமத்தினருக்கு தகவல் பரவிய நிலையில் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
எடுத்து வரப்பட்டது. மருத்துவமனையில் தோடரின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபகரன் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியின் உறவுக்கார இளைஞர் ராஜேஷ் குட்டன் என்பவர் சிறுமியை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி கொண்டு வீட்டிற்கு செல்லும் வனப்பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது
மேலும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் குட்டன் நீதிமன்றத்தில் அரசியல் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
10-ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.