மதுரை திருப்பரங்குன்றம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள அயன்பாப்பாகுடி கண்மாய் இது இந்த பகுதியின் நீர் ஆதாரம் இந்த பகுதி விவசாயம் அதிகமுள்ள பகுதி இந்த பகுதி.இந்த கண்மாய் மூலம் அவனியாபுரம், வெள்ளக்கல், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

ஒரு பக்கம் வெயில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மதுரையில் கடந்த சில நாட்கள் பெய்து வரும் கனமழை காரணமாக அயன்பாப்பாகுடி கண்மாய் நிரம்பி தண்ணீர் விவசாய பாசன கால்வாயில் செல்கிறது.
இந்த கண்மாயில் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து வரும் நீருடன் கலந்து வெண்ணிற நுரை வெளியேறி வருகிறது.

இதனால் பாசன கால்வாயில் வெண்ணிற மலை போன்று நுரை காட்சியளிக்கிறது. இந்த பாசன கால்வாய் வழியாக நுரையானது விவசாய நிலத்திற்கு செல்வதால் விவசாயிகள் குழப்பத்துடன் கூடிய அச்சத்தில் இருந்து வருகின்றனர்.கழிவு நீர் கலப்பதால் ரசாயணம் கலந்திருக்குமோ என்று அச்சப்படுகின்றனர் விவசாயிகள்.
இதனை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.