அதிமுக கட்சி வேஷ்டியை அணியக்கூடாது என ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு. !

2 Min Read
ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்
  • அதிமுக கரை படிந்த கட்சி வேஷ்டியை அணியக் கூடாது என்று எந்த நாயாவது சொன்னால் என் மீது வழக்கு தொடரட்டும் நடவடிக்கை எடுக்கட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் – ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் .

- Advertisement -
Ad imageAd image

வருகிற 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக உரிமை மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இபிஎஸ் அணியில் எப்போதும் ஓபிஎஸ் அணி இணைய முடியாது என்று இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் சொல்லி உள்ளார். எடப்பாடி இதற்கு முன்னாடி சொல்லி இருக்கலாம். ஆனால் தற்போது அவர் சொல்லி இருக்கிறாரா? அதைப்பற்றி சொல்வதற்கு மற்றவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும்.

எடப்பாடி அணியில் இணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என எடப்பாடி அணியின் சார்பில் சொல்லப்படுகிறது என கேட்ட கேள்விக்கு நான் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளரை சந்தித்து பேட்டி அளித்த பிறகு எடப்பாடி சார்பில் மற்றும் அவரது அணியில் இருந்து ஏதும் சொல்லப்பட்டதா அதற்கு முன்பு வேண்டுமானால் எடப்பாடி அணியில் இணைய முடியாது என்று சொல்லி இருக்கலாம் ஆனால் தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனக் கூறினார்.

ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்

மேலும் எடப்பாடி அணியில் இணைய முடியாது என அதிமுக மாவட்ட செயலாளர் மா
சேகர் சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னதற்கு யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஒரு தகுதி இருக்க வேண்டும் என கூறினார் நாங்கள் அதிமுகவின் உரிமை மீட்பு குழு தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பொதுச் செயலாளர் அதை தலைவர் உடையுடைய என இருக்கிறார்கள் சர்வாதிகாரிகள் இணைவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக நான் எதையும் சொல்ல விரும்பவில்லை ஆதலால் என்னை விட அதிமுகவில் வரலாறை சொல்லவோ பேசவோ தகுதி இல்லை 2026 தேர்தலில் இனைவதற்க்கு வாய்ப்பு உண்டா என கேட்ட கேள்விக்கு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்குள் நாங்கள் ஒன்றிணைக்கிறோம் அதிமுக ஒன்றிணைந்து மீண்டும் வலிமையாக 2026 ஆட்சி அமைக்கும் நான் இந்த இயக்கம் பெற்றுத் தர வேண்டும் என்று நினைக்கிறேன் நான் பதவிக்காக கட்சியில் இருப்பவன் அல்ல தொண்டர்கள் மரியாதையுடன் நடமாட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

அதிமுக கரை படிந்த கட்சி வேஷ்டியை அணியக் கூடாது என்று எந்த நாயாவது சொன்னால் என் மீது வழக்கு தொடரட்டும் நடவடிக்கை எடுக்கட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என ஒருமையில் கோபத்துடன் பேசியதால் அங்கு சிறிது சலசலப்பு இந்த இயக்கத்தில் சேர்க்கவில்லை என சொல்பவர்கள் இயக்கத்தில் தானாகவே காணாமல் போய்விடுவார்கள் அனாதை ஆகி விடுவார்கள் என தெரிவித்தார்.

Share This Article
Leave a review